Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் : தமிழக – கேரள எல்லை மூடல் ….!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக – கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியை இன்று மூட உள்ளதால் கேரளாவில் இருந்து கோவை வர எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை. இன்று மாலை முதல் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முக்கிய வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து தமிழத்திற்கு வாகனங்கள் முழு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டனர். இந்த சுழ்நிலையில் தமிழக – கேரள எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகள் மூட மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கேரளாவில் இருந்து எந்த வாகனமும் கோவை எல்லைக்கும் நுழைய முடியாது என கூறியுள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த படியாக கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தான் இந்த முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |