Categories
தேசிய செய்திகள்

டெல்லியை மிரட்டும் கொரோனா… இன்று மட்டும் 1,192 பேருக்கு தொற்று… 11 பேர் பலி…!!

டெல்லியில் இன்று மட்டும் 1,192 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மட்டும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,652 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 11 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,178 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று 790 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,35,108 ஆக அதிகரித்துள்ளதாகவும், தற்போது வரை 11,366 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |