Categories
தேசிய செய்திகள் பல்சுவை

”ரூ 11,450,00,00,00,000” முதலீட்டாளர்களை கொதறிய கொரோனா …!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளுக்கு விரைவாக பரவி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இந்தியாவில் 70க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை , கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகின்றது.

இதனால் இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாமே கதிகலங்கி நிற்கின்றது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் இருந்தே சரிவிலிருந்ததால் முதலீட்டாளர்கள் கவலையுடன் இருந்தார்கள். ஆனால் கடந்த 12 ஆண்டு இல்லாத அளவு சரிவு கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மிரண்டுபோயுள்ளனர்.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் சரிந்து 32,778 புள்ளிகளுக்கு , தேசிய பங்குச்சந்தையான நிப்டி 868 புள்ளிகள் சரிந்து 9,590 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.  இன்றைய ஒருநாளில் மட்டும் 11.45 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தது.

Categories

Tech |