ராம் மந்திர் என்ற அறக்கட்டளையின் தலைவர் நித்ய கோபால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்தது. இதில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர், ஆர்எஸ்எஸ் தலைவர் போன்ற முக்கியமான தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்காக ராம் மந்திர் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தலைவராக நித்ய கோபால் தாஸ் இருக்கிறார். இவரும் பூமி பூஜை விழாவில் பங்கேற்றுள்ளார்.
தற்போது நித்ய கோபால் தாஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். விழா முடிந்து ஒரு வாரம் ஆனதை அடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மதுரா மாவட்ட கலெக்டரிடம் பேசிய யோகி ஆதித்யநாத், மெதந்தா மருத்துவமனை டாக்டரை தொடர்பு கொண்டு, நித்ய கோபால் தாஸ் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்துள்ளார்.