சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்த நபரின் கடைக்கு சென்றவர்களின் விவரங்கள் குறித்து அரசு சேகரித்து வருகின்றனர். மேலும், கடைக்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்துமாறும், தானாக முன் வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக உலகமே பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த நோயின் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறி, உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற கடைகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். 14ம் தேதியோடு ஊரடங்கு உத்தரவு முடிவடையில் நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை.
இதையடுத்து, ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், இதுவரை 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள மாளிகைக்கடைக்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார் அனைத்து வாடுகளையும் கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த கடைக்கு இதுவரை சென்றவர்களின் விவரங்கள் குறித்து அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.