Categories
தேசிய செய்திகள்

“கொரோனா”… இந்தியா தொடர்ந்து முன்னிலை… 24 மணி நேரத்தில்… 65,000 பேருக்கு தொற்று… 996 பேர் பலி…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக முழுவதும் அதி தீவிரமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது . குறிப்பாக சென்ற சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50,000க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது., இந்நிலையில் இந்தியாவில் சென்ற 24 மணி நேர கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,26,193 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 6,68,220 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து 57,382 பேர்  குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18,8,937 ஆக அதிகரித்துள்ளது.

இதனால் குணமடைந்தோர் வீதம் 71.61 என்ற அளவில் உள்ளது. ஆனாலும் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 996 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 49,036 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா இறப்பு சதவிகிதம் 1.94 என்ற அளவில் இருக்கிறது.அதேபோல் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 8,68,679 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2 கோடியே 85,6395 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |