மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு நாள்தோறும் தகவல்களை தெரிவித்து வந்தவர் லாவ் அகர்வால். மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலாளரான அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருப்பதால், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறும் லாவ் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.