முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என யாரும் தப்பவில்லை.
இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் சென்றிருந்த நிலையில் பெண் காவலர் உறுதி செய்யப்பட்டுள்ளது.