இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின், ஆல்ரவுண்டரான வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்கள் கூட்டம் நிரம்பி உள்ளது. அதோடு ஆக்ஸிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் கொரோனா தொற்றால், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இவரின் குடும்பத்தினருக்கு, கொரோனா பரிசோதனை செய்தபோது,அவரது தாயார் மற்றும் சகோதரிக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவிட்டு, அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஏப்ரல் மாதத்தில் இவரின் தாயார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தற்போது அவரது சகோதரியும் 2 வார போராட்டத்திற்கு பிறகு ,உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேதா கிருஷ்ணமூர்த்திக்கு பலரும் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.