Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா  தொற்றிலிருந்து குணமடைந்து… மீண்டும் அணியுடன் இணைந்த அக்சார் பட்டேல்…!!!

டெல்லி கேப்பிடல்ஸ்  அணியின் சுழல் பந்து வீச்சாளரான அக்சார் பட்டேல் கொரோனா தொற்றிலிருந்து மீட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி ஐபிஎல் போட்டிக்காக, டெல்லி கேப்பிடல்ஸ்  அணியுடன் சுழல் பந்து வீச்சாளரான  அக்சார் பட்டேல் இணைந்தார். அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் போட்டியின் பங்கு பெறாமல் தனிமைப்படுத்தப்பட்டு வந்தார்.

தற்போது பரிசோதனை செய்தபோது, கொரோனா  தொற்றிலிருந்து பூரண குணமடைந்து உள்ளார். எனவே மீண்டும் அக்சார் பட்டேல் அணியுடன் இணைய உள்ளார். இருந்தாலும் வரவுள்ள போட்டிகளில் அவர் பங்கு பெற மாட்டார். சில நாட்கள் கழித்த பின் , டெல்லி கேப்பிடல்ஸ்  அணியின்  ஆடும் லெவனில்  இணைந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |