Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த…. விருத்திமான் சஹா வீடு திரும்பினார் …!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ,சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த   விருத்திமான் சஹா தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளார்.

2021ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் தொற்றால் பாதிக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த  விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்.

இந்நிலையில் தொற்றிலிருந்து  குணமடைந்துள்ள, விருத்திமான் சஹா வீடு திரும்பி உள்ளதை , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் “குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில்  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது .இந்த அணியில் விருத்திமான் சாஹாவும் இடம்பெற்றுள்ளார் .எனவே அவர்  அணியில் இணைந்து  விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |