கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ,கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா குணமடைந்தார் .
14 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதலில் சென்னை, மும்பை நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன .அதன் பிறகு டெல்லி , அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இதில் தொற்றால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட பிரசித் கிருஷ்ணா, பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இங்கிலாந்து தொடரில் மாற்று வீரர்களில் ஒருவராக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளதால் , நாளை மும்பையில் ஹோட்டலில் வீரர்களுடன் தனிமைப்படுத்துதலில் இணைகிறார் .