Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு…. ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றமைக்  ஹஸ்சி…!!!

கொரோனா  தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த, சிஎஸ்கே அணி பயிற்சியாளர் மைக்  ஹஸ்சி  தாயகம் திரும்பியுள்ளார்.

14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி  தொற்றால் பாதிக்கப்பட்டு,  ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப முடியாத நிலையில் சிக்கிக் கொண்டார் . சென்னையில் தனியார் மருத்துவமனையில் ,சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில், ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளதால் இவர், தற்போது ஆஸ்திரேலியா செல்வதற்கான சிக்கல் நீங்கியது. இதனால் இன்று அதிகாலை சென்னையிலிருந்து  தோகா வழியாக மைக் ஹஸ்சி சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு திரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பங்குபெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவில் தங்கியிருந்த நிலையில் தற்போது அவர்களும் இன்று தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்கின்றனர்.

Categories

Tech |