கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு நிர்ணயிக்கலாம் என IMA தமிழக பிரிவு பரிந்துரை வழங்கியுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்ததை அடுத்து கடந்த 4 நாட்களுக்கு மேலாக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படக் கூடிய பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற ஒரு உத்தரவு என்பது இன்று தமிழக அரசு சார்பில் அரசாணையாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கான தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய மெடிக்கல் அசோசேஷன் ஒரு கடிதத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்-சுக்கு அனுப்பியுள்ளது. அதில், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று ஒரு பரிந்துரையை தமிழக அரசுக்கு இந்தியன் மெடிகல் அசோசேஷன் தமிழக பிரிவு வழங்கியுள்ளது.
லேசான பாதிப்பு நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு ரூ 23,000 என 10 நாட்களுக்கு 2,31,820 ரூபாய் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே போல தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 23,377 ரூபாய் என ரூ.4,31,411 வசூலிக்கலாம் என இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது.