Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு கொரோனா …. குடும்பத்துடன் தனிமையில் இருப்பதாக ட்விட்…!!!

நடிகர் சாந்தனுவின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவர் தனிமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களான பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர்க்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்களது மகனும், பிரபல நடிகருமான சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது பெற்றோர்கள் கே பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரையின் படி எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த 10 நாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் எங்களது பெற்றோர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |