Categories
உலக செய்திகள்

கொரோனோவின் கோரப்பசி.. உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தையும் கடந்துள்ளது..!!

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தையும் எட்டியுள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 13 லட்சத்து 45 ஆயிரத்து 751 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சிகிச்சை பெறுபவர்களில் 47 ஆயிரத்து 518 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 478 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 74 ஆயிரத்து 647 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்:

அமெரிக்கா – 10,871

ஸ்பெயின் – 13,341

இத்தாலி – 16,523

ஜெர்மனி -1,810

பிரான்ஸ் – 8,911

சீனா – 3,331

ஈரான் – 3,739

இங்கிலாந்து – 5,373

துருக்கி – 649

சுவிஸ்சர்லாந்து – 765

பெல்ஜியம் – 1,632

நெதர்லாந்து – 1,867

கனடா               – 323

 

Categories

Tech |