கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆட்டோக்களில் சவாரி கிடைக்காததால் ஆட்டோ டிரைவர்கள் காய்கறி விற்கும் தொழில் செய்ய தொடங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அதிகரித்துள்ளனர். இதனால் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன. மக்களும் கொரோனா வைரஸ் பயத்தால் வெளியில் செல்லாமல் வீடுகளில் இருப்பதால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்கியுள்ளது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு போதிய சவாரி கிடைக்காததால் வருமானம் இன்றி தவிக்கின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்காலிகமாக வேறு தொழில் செய்து வருகிறார்கள்.
ஒரு சிலர் ஆட்டோக்களில் மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் என குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து ஆட்டோ தொழிலாளிகள் கூறுவது ” ஊரடங்கு உத்தரவால் ஆட்டோ தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. அரசு ஒரு சில விதிமுறைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி அனுமதியளித்துள்ளது. இருப்பினும் கொரோனா பயத்தால் மக்கள் வெளியில் செல்வதை குறைத்து விட்டனர். எனவே வேறு வழியில்லாமல் ஆட்டோக்களில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறோம். இது அன்றாட செலவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது” என தெரிவித்துள்ளனர்.