Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கு – வருமானம் இழந்த கலைஞர்கள் : குறைந்த விலையில் இட்லி, தோசை வழங்கி வருகின்றனர்…

தஞ்சையில் கொரோனா ஊரடங்கை ஒட்டி வருமானம் இழந்த பேண்ட் வாத்தியக் குழுவினர் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு பொருட்களை குறைந்த விலைக்கு வழங்கி வருகின்றனர்.

தஞ்சை நாஞ்சி கோட்டை சாலை பாத்திமா நகரில் வசித்து வரும் ஜெனிட்ட என்பவர் பேண்ட்  இசைக்குழு  நடத்தி வருகிறார். கொரோன காரணமாக அணைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்ட நிலையில்  இசைக் குழுவை சேர்ந்த 20 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் வேறு யாருக்கும் நேரக்கூடாது என்பதற்காக இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து வீட்டிலேயே உணவு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

அவற்றை குறைந்த விலையில் அதாவது இரண்டு ரூபாய்க்கு இட்லி 5 ரூபாய்க்கு தோசை என விற்பனை செய்து வருகின்றனர்.  சொந்தமாக தொழில் செய்து பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் இதை செய்து வருவதாக கூறுகிறார் பேண்ட் வாத்திய குழு நடத்தும் ஜெனிட்டா. கொரோனா ஊரடங்கால் நிகழ்ச்சிகள் ஏதும் இன்றி தவித்து வரும் பேண்ட் வாத்திய இசைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது.

Categories

Tech |