சீனாவின் வுகாண் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி படாதபாடு படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றது. இதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அரசியல் தலைவர்கள் தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.
முன்னதாக பிரதமர் மோடி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டுக்கொண்டனர். இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய மகளுடன் சென்று போட்டுக் கொண்டார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகை குஷ்பூ தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தடுப்பூசி போட்டுக்கொண்டார்.