விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார்.
கொரோனா தொற்று 2ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த வழிமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ் நேற்று அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.