Categories
உலக செய்திகள்

இலவசமாக அனுப்பப்படும் தடுப்பூசி… மற்ற நாடுகளுக்கு உதவும் எண்ணம்… எப்போதும் இந்தியா துணை நிற்கும்…!!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தியா நட்பு நாடுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

இந்தியா நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி மியான்மர், வங்கதேசம், மாலத்தீவு நேபாளம், பூடான், இலங்கை, மொரீசியஸ் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி மருந்தை அனுப்பி வைத்திருக்கிறது.

இந்நிலையில் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஏர் இந்தியா விமானத்தில் மும்பையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு காபுல் சென்றடைந்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, எப்போதும் நமது நட்பு நாடுகளுக்கு துணை நிற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |