தினமும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறந்தவர்களின் எண்ணிக்கை என ஒரே செய்தியை தொடர்ந்து பார்க்க அனைவருக்கும் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டு எப்பொழுதுதான் இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற எண்ணம் எழுந்திருக்கும் அதற்கு பதிலளிக்கும் விதமாக சர்வதேச விஞ்ஞானிகள் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
அதற்கான பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு கண்டுபிடிக்கப்படலாம். ஆனால் உறுதியாக கூறமுடியாது என தெரிவித்துள்ளனர்.
புதிதாய் வரும் வியாதிக்கு தடுப்பூசி எவ்வளவு காலத்தில் தயாராகும்
சுமார் 8 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும்.
கொரோனாவுக்கு மட்டும் எப்படி ஒன்றரை வருடம்?
கொரோனாவின் குடும்பம் முன்னதாகவே நக்கலை தாக்கியுள்ளது. தற்போது தன்னை புதுப்பித்துக் கொண்டு மனிதர்களை தாக்கியுள்ளது. எனவே இதுதொடர்பான தடுப்பு ஊசி குறித்த ஆராய்ச்சியில் முன்னதாகவே விஞ்ஞானிகள் இறங்கியிருக்கும் காரணத்தால் சிறிய மாற்றங்கள் செய்து இப்போது நம்மை தாக்கியிருக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசியை விரைவில் கண்டுபிடித்து விடலாம்.
தடுப்பூசி கண்டறிய எதற்காக இத்தனை தாமதம்?
தடுப்பூசியை தயார் செய்த பிறகு உடனடியாக மனிதர்களுக்கு கொடுக்க முடியாது. அது அதிக அளவு உயிர் பலியை ஏற்படுத்தும். அதனை தடுக்க முதலில் விலங்குகளின் மீது தடுப்பூசி சோதிக்கப்படும். விலங்குகளிடம் மேற்கொண்ட சோதனையில் வெற்றி கிடைத்ததும் அடுத்தகட்டமாக மனிதர்களிடம் தடுப்பூசி சோதனை பண்ணப்படும்.
அதிலும் மூன்று கட்டங்களாக சோதனைக்கு உட்படுத்தப்படும். முதல் கட்டமாக சிறிய குழு ஒன்றுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும். இரண்டாவது கட்டமாக பெரிய குழுவிற்கு அதாவது நூற்றுக்கணக்கான மனிதர்கள் மீது சோதனை செய்யப்படும். அதிலும் நல்ல பலன் கிடைத்தால் மூன்றாம் கட்டமாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி சோதனை செய்யப்படும். இந்த சோதனையை காலவரையின்றி விரைவாக செய்தால் அதிக அளவில் உயிரிழப்புகளை சந்திக்கக்கூடும்.
தடுப்பூசி மனிதர்களின் உடலில் வேலை செய்கிறதா என்பது எப்போது தெரியும்?
நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தெரியவரும்.
அடுத்த வருடம் நிச்சயமாக தடுப்பூசி வந்துவிடுமா?
வரலாம் ஆனால் எந்த உத்திரவாதமும் இல்லை.
சர்வதேச விஞ்ஞானிகள் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்திருக்க, சர்வதேச மருத்துவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கைகளை சுத்தமாக வைத்துக் கொண்டு தடுப்பூசி கண்டறியப்படும் வரை கொரோனா தொடருடன் வாழ்வதற்கு பழகிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர்