பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி 409 பேருக்கு போடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 46 பேருக்கும், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 363 பேரும் என மொத்தம் 409 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 2,054 பேரும், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 36 ஆயிரத்து 669 இருக்கும் என மொத்தம் 36,269 பேரும் என மொத்தம் 38,323 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 500-ம், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 6,980-ம் கையிருப்பில் உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.