Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டதில்… 11 கோடியை எட்டியது இந்தியா….!!

 கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 88 ஆவது நாளான நேற்று முன்தினம் மட்டுமே 266.46 லட்சம் பேருக்கு டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இந்தியாவில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பயனாளர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இவ்வாறு அதிவேகமாக நடத்தப்பட்டு வரும் பணிகள் காரணமாக இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 11 கோடியை தாண்டியுள்ளது. நேற்று காலை 7 மணி அளவில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் பட்டியலில் எண்ணிக்கை 11 கோடியே 11 லட்சத்து 79 ஆயிரத்து 578 டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசி திட்டத்தில் 88 -வது நாளான நேற்று முன்தினம் மட்டுமே 26,46 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் பயனாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் தடுப்பூசி திருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கப்பட்டு நேற்றுவரை போடப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த தடுப்பூசி திருவிழா சிறப்பான முறையில் அதிக பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுமுடிவடைந்தது.

Categories

Tech |