Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… திண்டுக்கல்லில் சிறப்பு முகாம்… திரளானோர் பங்கேற்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையில் உள்ள அரசு ஆதிதிராவிட நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிரிஸ் ஆலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். மேலும் புதூர், பெரும்பாறை, எம்.ஜி.ஆர்.நகர், குத்துக்காடு, வெள்ளரிக்கரை, மூலக்கடை, மஞ்சள்பரப்பு, கட்டக்காடு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 18 வயது முதல் 44 வயது வரை உள்ள பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அந்த முகாமில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து வந்துள்ளனர். மேலும் இந்த முகாமில் மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா செல்வகுமார், ஆத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஊராட்சி செயலர் திருப்பதி, துணைத்தலைவர் சுருளிராஜன், வார்டு உறுப்பினர்கள் ஜெயமணி, சிந்தனைச்செல்வி, ஆண்டியம்மாள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |