பிரித்தானியாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் 16 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள பள்ளிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதால் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் ஏராளமானோர் தடுப்பூசியை பெற்று பாதுகாப்பிற்கு உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள என்ஹெச்எஸ்ஸிடம் 16 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் வருகின்ற ஆகஸ்ட் 23, திங்கள்கிழமை அன்று தடுப்பூசி முதல் டோஸ் போட்டிருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் 800-க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் 16 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டவர்களாக விரைவில் திறக்கப்படும். எனவே அனைவரும் தடுப்பூசி ஸ்லோட்டை புக் செய்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.