மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. வான ரகுராமன் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ , சுகாதாரத்துறை துணை இயக்குனர், தி.மு.க நகர செயலாளர், என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி இலக்கினை எட்டுவதற்காக இந்த முகாம் அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு இந்த முகாமில் இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.