Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனாவால்… ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டவர்கள்… மருத்துவ வட்டாரம் தகவல்..!!

அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 676 பேர் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

பல்வேறு இடங்களில் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசியும் ஆங்காங்கே செலுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார அரசு மருத்துவமனைகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இரண்டு தனியார் மருத்துவமனைகளிலும், பெரம்பலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரனோ தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள், அரசு அலுவலர்கள், முதியோர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் 37 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும், 639 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும் மொத்தம் 676 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 178 பேருக்கும், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 13,258 பேருக்கும் என மொத்தம் 13 ஆயிரத்து 436 பேருக்கு பெரம்பலூரில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி போடுவதற்கு ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்று மருத்துவ வட்டாரம் கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |