Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… 100 டாலர்கள் பரிசு… மேயர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நியூயார்க் மேயர் அந்நகரில் உள்ள மக்களில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த தொடங்கியுள்ளது. கலிபோர்னியா, புளோரிடா, லூசியானா, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் டெல்டா வகை வைரஸ் பரவல் தான் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாகியுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நியூயார்க் மேயர் டெ பிளாசியோ கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு நியூயார்க் நகரில் 100 டாலர் பரிசு என அறிவித்துள்ளார். அதாவது முதல் டோஸ் தடுப்பூசியை செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்குள் போட்டுக்கொள்ளும் நியூயார்க் பகுதி மக்களுக்கு 100 டாலர் பரிசு என அறிவித்துள்ளார். மேலும் இந்ந 2 டோஸ் தடுப்பூசிகளையும் இதுவரை 66 சதவீதம் பேர் போட்டுள்ளதாகவும், முதல் டோஸ் தடுப்பூசியை 71 சதவீதம் பேர் போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |