Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடலைன்னா சம்பளம் கிடையாது…. அரசு அதிகாரி எச்சரிக்கை…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் அடுத்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவில் நாளுக்கு நாள் தொட்டு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் கவுரல்லா பென்டர மார்வாகி என்ற பகுதியில் பழங்குடியினர் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மூடநம்பிக்கை, அச்சம், தயக்கம் போன்ற காரணத்தினால் தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர்.

இதையடுத்து அரசு ஊழியர்களும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் மேம்பாட்டு துறை உயரதிகாரிகள் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர். அது என்னவென்றால் பழங்குடியினர் நலத்துறை அலுவலகங்கள், துறைக்குட்பட்ட ஆசிரமங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவரும் கண்டிப்பாக தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் தான் அடுத்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |