மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் என்ற பகுதியில் பாஜக தலைவி தடுப்பூசி செலுத்தும் மையத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பாஜக தலைவி மாதிரி ஜெய்ஸ்வால் தனது பிறந்த தடுப்பூசி செலுத்தும் மையத்தில் கொண்டாடினார். இந்தூரில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற மதூரி ஜெய்ஷ்வால் அங்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். ஆனாலும் அவர் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் மதூரி ஜெய்ஷ்வால் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “மகிழ்ச்சியின் உச்சத்தில் எனது தொண்டர்கள் எனது பிறந்தநாளை தடுப்பூசி மையத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த செயலுக்காக எனது வார்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.