மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியிலும்,
பாஜக, முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மற்றொரு அணியகவும் களம் காணவுள்ளன.
இந்த நிலையில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என பாஜக தெரிவித்துள்ளது. பாட்னாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.