தடுப்பூசி வாங்குவதில் உலக நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கிறது.
கொரோனா வைரஸ் ஒழிப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 212 கொரோனா தடுப்பூசிகள் ஆய்வில் வளர்ந்து வருகிறது. இருப்பினும் சில தடுப்பூசிகள் மட்டுமே அவசர தேவைக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளில் இருந்து தடுப்பூசி பெறுவதற்கு பல நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. இதில் அதிக வருமானம் கொண்ட நாடுகள் தான் அதிக தடுப்பூசியை வாங்கி வருகிறது. ஆனால் மிகக் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் குறைவான தடுப்பூசிகளை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடுகளிடம் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.
ஏனென்றால் அதிக வருமானம் கொண்ட நாடு ஒரு நபருக்கு 5 முறை செலுத்துவதற்கான தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது. ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தங்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதிப் பேருக்கு மட்டுமே தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது. அப்படி குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தடுப்பூசியை வாங்கினாலும் அதனை சேமித்து வைப்பதற்கான இடங்களும், மின் வசதிகளும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இல்லை. இதனால் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது.