100 பேருக்கு சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஆகஸ்ட் 12 – ஆம் தேதியன்று நகராட்சி ஆணையரான அசோக்குமாரின் உத்தரவின் பேரில் சுகாதார துறை அதிகாரிகள் முஸ்லிம் நடுத்தெருவில் தடுப்பூசி முகாமை அமைத்துள்ளனர்.
அதன்பிறகு முகாமை மருத்துவரான சொகைல் ராஷீத் மீரான் தொடங்கி வைத்துள்ளார். இந்த சிறப்பு முகாமில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.