Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊழியர்கள் மீது அக்கறை…. சிறப்பு தடுப்பூசி முகாம்…. தாசில்தாரின் அதிரடி செயல்….!!

ரேஷன் கடை மற்றும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கான தாலுகா அலுவலகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் 143 ரேஷன் கடைகள் மற்றும் 50 – க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் கடைகளும் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என முடிவெடுத்த தாசில்தார் சிறப்பு முகாமை தாலுகா அலுவலகத்தில் அமைத்துள்ளார்.

இந்த சிறப்பு முகாமை தாசில்தாரான ராஜ்குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். மேலும் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் சமூகநல பாதுகாப்பு தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர் என பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |