விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புலிப்பாரைபட்டி பகுதியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகமானது வட்டார மருத்துவ அதிகாரியான செந்தட்டி காளை முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகாமில் 200 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.