விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுக்கென சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது ஊராட்சி தலைவரான பசுபதி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர், மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த சுகாதாரக் குழு சார்பில் 150 பேருக்கு தடுப்பூசியானது செலுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பயநாயக்கர்பட்டி பகுதியிலும் ஊராட்சி தலைவரான கணேஷ் குமார் என்பவரின் முன்னிலையில் 130 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.