கொரோனா தடுப்பூசிகளை திருட்டுத்தனமாக திருடி சென்று தனது உறவினர்கள், நண்பர்களுக்கு செலுத்திய அமெரிக்க டாக்டர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த ஹசன் கோகல் என்ற டாக்டர் மாடர்ன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை ஒன்பது மருந்துகளை திருடிச் சென்றுள்ளதாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. ஆனால் அந்த டாக்டர் தடுப்பு ஊசி மருந்தின் பாதுகாப்பு குடுவை சேதம் ஆகிவிட்டதாகவும், மருந்து வீணாகி விடாமல் தவிர்க்கவே மனைவி உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்களுக்கு செலுத்தினேன் என்று காரணம் கூறியுள்ளார்.
ஆனால் சட்டபூர்வமாக யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமோ அவர்களுக்கு அளிக்காமல், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தடுப்பூசி போடுவது தவறு என்று அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரது வேலை நீக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அவர் ஓர் ஆண்டு சிறை தண்டனையும் 4 ஆயிரம் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.