கோவேக்சின் கொரோனா தடுப்பூசியினை தயாரிக்க மும்பையை சேர்ந்த ஹாப்கின் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சில மாதங்களாக அதன் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக விஸ்வரூபம் எடுத்து மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்தக் கொரோனா தொற்றினை தடுக்க இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிஷில்டு மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருவதால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதிகளவில் தேவைப்படுகின்றன.
அதனால் கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஹாப்கின் என்ற நிறுவனம் அனுமதி கேட்டிருந்தது. அந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்குமாறு மகராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கோவெக்சின் தடுப்பூசியை தயார் செய்ய மும்பையைச் சேர்ந்த ஹாப்கின் என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி கூறியுள்ளது.
இதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் ரேணு ஸ்வரூப், தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த மாதம் முதல் ஒரு ஆண்டு காலம் வரை இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.