Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி வேணுமா..? “அப்ப நீங்க இத கட்டாயம் பாலோ பண்ணனும்”… வெளியான அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் கட்டாயம் மது அருந்தக் கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசி அளிக்கும் வகையில் மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. இதனை வருகிற 16-ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறது. இதில் முதல் தடுப்பூசி போடப்பட்ட அடுத்த 24 நாட்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி போடப்படும்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்கள் 28 நாட்களுக்கு அதிகம் வெளியில் செல்லக் கூடாது. மது அருந்துதல் கூடாது என தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடப்பட்டு 48 நாட்களுக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும், ஆகையால் பொதுமக்கள் இரண்டாவது டோஸ் போடும் வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |