கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு முன்பாக கொரோனோ தடுப்பூசி தட்டுப்பாட்டால் பணி நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து மாநில சுகாதாரத்துறை சார்பில் 8200 டோஸ் தடுப்பூசி மருந்துகள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மெயின் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வைத்து 530 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் கிராம பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது தடுப்பூசி செலுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பொது மக்கள் அதனை வந்து கட்டாயம் போட்டு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.