Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா வைரஸ் எதிரொலி ….உள்நாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு….பிசிசிஐ அறிவிப்பு ….!!!

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக  உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேசமயம் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ்பரவல் அதிகரித்து வருவதால் 3-வது அலையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 2021-22 ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை, சி.கே. நாயுடு கோப்பை மற்றும் மகளிர் சீனியர் டி20 லீக் ஆகிய   உள்நாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Categories

Tech |