கொரோனா தொற்று பரவல் காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இதனால் உள்ளூரில் நடந்து வரும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உள்ளூர் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதி அனுப்பிய கடிதத்தில் ‘கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளூர் தொடர்கள் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததும் மீண்டும் நடத்தப்படும் ‘ என்று அவர் தெரிவித்துள்ளார்.