இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் ,என்று அஸ்வின் கேட்டுக்கொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ,இந்த சீசன் ஐபில் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி இருந்தார் ஆனால் தொடரில் பாதியிலேயே அஸ்வின் விலகினார். அவரின் குடும்பத்தினருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதன் , காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் , கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக பொதுமக்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு நின்றனர்.
இதனால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் அனைவரும் முறையாக தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் மக்கள் முண்டியடித்து கூட்டமாக நின்று உள்ள படத்தை குறிப்பிட்டு அஸ்வின், இதை காணும் போது பயமாக இருக்கிறது என்றும், எனவே இது போன்ற பயங்கரமான விஷயங்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஏராளமான மக்கள் இந்த நோயினால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்றும் அனைவரும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் அவர் தெரிவித்துள்ளார்.