Categories
உலக செய்திகள்

“பிறந்த 20 நாளில் கொரோனா பாதிப்பு”… 37 வது நாளில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை… சோகத்தில் மூழ்கிய நாடு…!!

கிரீஸில் பிறந்த 20 நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 37வது நாளில் ஆண் குழந்தை ஒன்று  உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இந்த கொரோனா வைரஸினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. இந்நிலையில்  கிரீஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 6,800 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 480 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காய்ச்சல் மற்றும் நாசியில் வீக்கம் போன்ற பாதிப்பால் ஒரு ஆண் குழந்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது. பிறந்து 20 நாட்களே ஆன நிலையில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது  பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர் மருத்துவர்கள் 17 நாட்கள் மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக கிரீஸ் நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் kyriakos Mitsotakis  ட்விட்டரில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த குழந்தையின் இறப்பு “தாங்க முடியாத துக்கம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |