இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை ,இந்த மாதத்திலிருந்து உச்ச நிலையை அடையும் என்று விஞ்ஞானிகள் கணிப்பில் தெரிந்துள்ளது .
கடந்த ஆண்டு சீனாவில் மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றாது ,உலக நாடுகளை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை, இந்தத் தொற்றின் எண்ணிக்கையை உச்ச நிலையை எட்டியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ,அவற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துகொண்டே வந்தது. ஆனால் இந்த வருட தொடக்கத்திலிருந்தே, இந்தியாவில் கொரோனா தொற்றின், 2வது அலை படிப்படியாக வேகம் எடுக்கத் தொடங்கியது. தற்போது கொரோனா தொற்றின் , 2வது அலை பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 2வது அலை கொரோனா தொற்றின் எண்ணிக்கையானது ,மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி கான்பூர் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளரான மனிந்திரஅகர்வால் தலைமையில், விஞ்ஞானிகள் இணைந்து கணித முறையை பயன்படுத்தி கொரோனா தொற்றின் நிலையை, கணக்கிட்டு வருகின்றனர். இவர்கள் கணக்கின்படி இந்தியாவில் 2 வது அலை கொரோனா தொற்றானது ,இந்த ஏப்ரல் மாதத்தில் இடையிலிருந்து புதிய உச்சத்தை பெறும் என்றும், மே மாத இறுதியில் இந்த தொற்று படிப்படியாக வீழ்ச்சி அடையும் என்று கூறியுள்ளனர். இந்த 2வது அலை இந்தியாவில் அதிகரித்து, சராசரியாக ஒரு நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படும் என்று தெரிவித்தனர் .
இந்த 2வது அலை தொற்றுக்கு மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் ,தொற்றுள்ள மாநிலங்களாக விளங்கும், என்று ஆராய்ச்சியில்கூறினர். கொரோனா தொற்று உச்ச நிலையை அடையும்போது, எவ்வாறு வேகம் எடுக்கிறதோ ,அதேவேகத்தில் மே மாத இறுதியில் படிப்படியாக குறையும் என்று தெரிவித்தனர். ஐ.ஐ.டி யை தொடர்ந்து ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழக விஞ்ஞானியான கௌதம் மேனன் தலைமையில், நடந்த ஆராய்ச்சிக் குழுவில், ஏப்ரல் மாத இடையில் தொடங்கி ,மே மாதம் கொரோனா தொற்று உச்ச நிலையை அடையும் என்று கூறியுள்ளனர்.