Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ்… “குழந்தைங்க தான் அதிக அளவுல பாதிக்கப்படுவாங்க”… எச்சரித்த அறிவியலாளர்….!!

ஜெர்மனியில் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸால் சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்று Robert Koch  நிறுவனத்தின் தலைவர் Lothar  Wieler எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டனின் உருமாறிய  கொரோனா வைரஸ் சாதாரண கொரோனா வைரஸை போன்று அல்லாமல் மிகவும் பயங்கரமானது. இது அதிக அளவில் பரவக்கூடியது என்பதால் இனி வரும் காலங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் ஜெர்மனியில் சிலர் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்தி கொள்ள மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நம் நாட்டில்  கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும்  தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் கொரோனாவை தடுக்க கூடிய திறன் உள்ளவை என்று அவர் கூறியுள்ளார். பிரிட்டன் வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஜெர்மனியில் மிக வேகமாக பரவி வருகிறது என்று கூறியுள்ள Lothar  Wieler  அதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்றும் கூறியுள்ளார். எனவே மக்கள் காரில் சென்றாலும் பொது போக்குவரத்தை பயன்படுத்தினாலும் அலுவலகத்திற்கு சென்றாலும் கட்டாயமாக முகக்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்  என்றும் மற்றவர்களை சந்திப்பதையும் அவர்களுடன் பழகுவதையும் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு குறைத்து கொள்ள வேண்டும் என்றும்  Lothar  Wieler கூறியுள்ளார்.

Categories

Tech |