காவல்துறையினர் சார்பில் பொதுமக்களிடையே கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடையே தக்கோலம் காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பங்கேற்ற பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள், கிருமிநாசினி பாட்டில்கள் மற்றும் முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுவது , சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், தக்கோலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி, தக்கோலம் சப் இன்ஸ்பெக்டர் ராஜா, அரக்கோணம் மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.