கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பிரபலநடிகர்கள் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தினக்கூலி ஊழியர்களுக்கு நிதி திரட்டும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பிரபல நடிகர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், நடிகைகள் சோனாலி, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், உள்ளிட்டோர் இந்த குறும்படத்தில் நடித்துள்ளனர்.
மக்களை ஊரடங்கை மீறி அவசர தேவை இன்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படத்தை எடுக்க நடிகர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வில்லை என்றும், அவரவர் வீடுகளில் இருந்தபடியே எடுத்து அவற்றை தொகுத்து இருப்பதாகவும் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குறும்படத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை ஊதியமின்றி தவிர்த்து வரும் திரைத்துறையினர் தினக்கூலி தொழிலாளர்கள் போன்றோருக்கு வழங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.