மயிலாடுதுறையில் நடந்த கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி ஆட்சியர் நாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி மற்றும் தாசில்தார் சண்முகம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். இந்த கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி ஆட்சியர் நாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் சிறப்புரையாற்றினார். இந்த ஊர்வலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி கடைவீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்களான செல்வகுமார், சுசீந்திரன்,பாஸ்கரன், சாமிசெழியன், கண்ணன் மற்றும் சிவசண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.